தர்மபுரியில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது
தருமபுரி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி கவுசல்யா (27), கடந்த 23ம் தேதி, கவுசல்யா தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார் மறுநாள் காலை பார்த்தபோது, இரு சக்கர வாகனம் காணவில்லை. இதேபோல், பாலக்கோடு கடுக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் கடந்த 23-ம்தேதி இரு சக்கர வாகனத்தில் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரை பார்க்க சென்றார். அங்கு காத்திருப்போர் அறை முன், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, இரு சக்கர வாகனம் காணவில்லை. இதுதொடர்பான புகார்களின் பேரில் தர்மபுரி நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், கம்பைநல்லூர் பட்டகப்பட்டி அருகே உள்ள காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த பழனி மகன் ஆனந்த்(28) என்பவர், 2 இரு சக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜய்சங்கர் அவர்கள் தலைமையிலான போலீசார், மேற்கண்ட நபரை கைது செய்து 2 இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?