டோல்கேட் பகுதியில் தீவிர வாகன சோதனை; 11 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

May 6, 2024 - 13:17
 0  10
டோல்கேட் பகுதியில் தீவிர வாகன சோதனை; 11 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

தருமபுரி மாவட்டத்தில் கள்ள சந்தையில் மது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா ஆகியவை சகஜமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதையும், மேலும் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.அவரது உத்தரவின் பேரில் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருபவர்களை கைது செய்தும் வருகின்றனர்.இந்த நிலையில் தருமபுரி அருகே தொப்பூர் டோல்கேட் பகுதியில் நேற்று இரவு கஞ்சா தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர்.அதில் பயணம் செய்த 2 பேரின் பைகளை போலீசார் சோதனை செய்ததில் பொட்டலங்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தத சுமார் 11 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் விதைகளுடன் கஞ்சா செடிகள் இருந்தன.அதனை ஒடிசா மாநிலம் கேந்திராபுரா அருகே உள்ள ராஜி நகரைச் சேர்ந்த பாய்லோசார் பெகரோ (வயது25), புத்தாதீப் ரோத் ஆகிய 2 பேரும் ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 11 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow