காரில் குட்கா பொருள்கள் கடத்தி வந்த இளைஞர் கைது

Apr 11, 2024 - 15:54
 0  33
காரில் குட்கா பொருள்கள் கடத்தி வந்த இளைஞர் கைது

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மண்ணேரி பகுதியில் காவல்

உதவி ஆய்வாளா' மாரி தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில்

ஈடுபட்டிருந்தனா. அப்போது பாலக்கோடு பகுதியில் இருந்து பென்னாகரம்

நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா. அதில் அரசினால்

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னா

போலீஸார் நடத்திய விசாரணையில், ஒசூா அருகே அத்திப்பள்ளி

பகுதியில் இருந்து கோவைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக காரின்

உரிமையாளரான ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோந்த பாண்டுரங்கன் மகன்

அருள் (24) ஒப்புக்கொண்டதை அடுத்து போலீஸாா' அவரைக் கைது செய்து

காரில் கடத்தி வரப்பட்ட 163 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல்

செய்தனா. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து

குட்கா பொருள்களைக் கடத்தி வந்த இளைஞரை பென்னாகரம் குற்றவியல்
நீதிமன்றத்தில் ஆஜாபடுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow