4 வயது சிறுமி பலாத்காரம்; காமவெறியனுக்கு 20 ஆண்டு சிறை

Nov 27, 2024 - 13:20
 0  9
4 வயது சிறுமி பலாத்காரம்; காமவெறியனுக்கு 20 ஆண்டு சிறை

விழுப்புரம் அருகே வளவனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தணிகைவேல்(38). இவர் கடந்த 2018ம் ஆண்டு 4வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தையை வளவனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அப்போது டாக்டர்கள் பரிசோதனையில் அந்த குழந்தை பலமுறை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த சைல்டுஹெல்ப்லைன் ஜெயசீவி இதுகுறித்து வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 30.6.2018 அன்று தணிகைவேல் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி வினோதா தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தணிகைவேலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தணிகைவேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow