14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம்; வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

May 15, 2024 - 07:48
 0  13
14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம்; வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் குமார்(30). திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த இவர், 2021 கொரோனா காலத்தில் சுண்டக்குடி வந்துள்ளார்.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆரணிக்கு கடத்தி சென்று பஸ்சிலேயே கட்டாய தாலி கட்டியுள்ளார். பின்னர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீசார் போக்சோ வழக்கில் விக்னேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கை அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரித்து, விக்னேஷ் குமாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow