16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம்: காதலன் மீது போக்சோ வழக்கு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒரு புகார் வந்தது.அதில், 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செண்பகதேவி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.அப்போது, அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் எல்சன் (22) என்பவர் கடந்த 3 வருடமாக தன்னை காதலித்தார். திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்து, நெருக்கமாக இருந்தார். இதனால், கர்ப்பம் ஆனேன். இதன்பின்னர் தன்னிடம் பேசுவதை தவிர்த்துவந்தார். அவருக்கு பலமுறை போன்செய்தபோது எடுக்கவில்லை. வீட்டுக்கு சென்று பார்த்தாலும் இருப்பதில்லை. இதன்பிறகு காதலன் பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி காதலன் தாயாரிடம் விசாரித்தபோது, ஜெயசீலன் சிறையில் இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். காதலன் சிறையில் உள்ளார் என்பது எனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் பிரச்னை பெரிதாகி ஆகிவிடும் என்பதால் இந்த விஷயத்தை மறைப்பதற்காக, காதலன் குறித்த விவரங்களை மறைத்தேன். தற்போது, காதலன் எந்த சிறையில் இருக்கிறார் என்று தெரியவில்லை என சிறுமி கூறினார்.
What's Your Reaction?