4 லட்சம் மதிப்பிலான நாட்டு வெடிகள் பறிமுதல்; டிரைவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு புறவழிச்சாலையில் சீர்காழி இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புதுச்சேரியிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் லாரியில் மூட்டை, மூட்டையாக நாட்டு வெடிகள் இருந்தது தெரியவந்தது. 40 மூட்டைகளில் 400 கிலோ எடை கொண்ட நாட்டு வெடிகளின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் லாரியுடன் நாட்டு வெடிகளை பறிமுதல் செய்து புறவழிச்சாலையில் பாதுகாப்பாக ஒரு திடலில் நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் புதுச்சேரி காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?