சொந்த மச்சானை கடத்திய மாமன் உள்ளிட்ட 5-பேர் கைது

May 6, 2024 - 05:36
 0  8
சொந்த மச்சானை கடத்திய மாமன் உள்ளிட்ட 5-பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், நக்கல்பட்டியை அடுத்த ஒன்டியூர் கிராமத்தை சேர்ந்தவர்

பாலாஜி (34). இவர் சேலத்தில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகிய ஒன்றறை ஆண்டுகளில் மனைவியுடன் விவகாரத்து ஆகிவிட்ட நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மாமன் உறவு முறையான கிருஷ்ணகிரி மாவட்டம், கரடி கொள்ளப்பட்டியை சேர்ந்த மாதேஷ் (35) என்பவரிடம் 34 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.பல முறை கேட்டும் பாலாஜி கடனை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த மாதேஷ் தனது கூட்டாளிகளான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சாந்தகுமார் (44), தருமபுரியை சேர்ந்த கார்த்திக் (39), செல்வகமல் (46), ராஜ்கமல் (27) ஆகிய 5 பேருடன் கூட்டாக சேர்ந்து கடந்த 3-ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே வந்த பாலாஜியை சொகுசு காரில் கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.இந்நிலையில், இன்று காலை இவர்களிடமிருந்து தப்பி வந்த பாலாஜி காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் மாதேஷ் உள்ளிட்ட 5 பேரையும் ,கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.மேலும் மாதேஷ் உள்ளிட்ட 5 பேர், மீது ஆட்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow