பாலக்கோடு அருகே கல்லூரி மாணவன் மாயம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டியை சேர்ந்தவர் முருகன் வயது 44.இவர் பாலக்கோட்டில் பானி பூரி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கவியரசு வயது 19.இவர் பாலக்கோடு சர்க்கரை அருகேயுள்ள கல்லுாரியில் 2-ம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை முருகன் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தேடி வருகின்றனர்.
What's Your Reaction?