வங்கி ஊழியரிடம் பட்டா கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.இவர் லோன் ஏஜென்சி தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் தினேஷை தகாத வார்த்தைகளால் திட்டி பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.இதனால் கத்தியை பார்த்து மிரண்ட தினேஷ் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தினேஷ் வடக்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, சுள்ளான் விக்கி என்கிற விக்னேஷ்குமார், பிரவின்குமார் மற்றும் தீபன் ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து பட்டாக் கத்தியை பறிமுதல் செய்தனர்.இதில், சுள்ளான் விக்கி மீது ஏற்கனவே பத்து குற்ற வழக்குகளும், பிரவின்குமார் மீது மூன்று வழக்குகளும், தீபன் மீது ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?