ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு 1லிட்டர் பெட்ரோல் இலவசம்

தர்மபுரி போக்குவரத்து போலீசார் மற்றும் சமூக விழிப்புணர்வாளர்கள் சார்பில் தர்மபுரி நான்கு ரோடு வழியாக, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை கடைபிடித்து சென்றவர்களை ஊக்கவிக்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக 1 லிட்டர் பெட்ரோல் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி போக்குவரத்து எஸ்ஐக்கள் சின்னசாமி, சதீஷ், ரகுநாதன் மற்றும் சமூக விழிப்புணர்வாளர் வழக்கறிஞர் சுபாஷ், சதீஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






