அரியலூரில் 4 லட்சம் மதிப்பிலான 400 கிலோ குட்கா பறிமுதல்: போலீசார் அதிரடி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4 ரோடு வழியாக கும்பகோணம் பகுதிக்கு சிலர் சட்டவிரோதமாக குட்கா பொருட்களை காரில் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலம், ஜாலோர் மாவட்டம் காலப்புரா பகுதியைச் சேர்ந்த ராணாராம் மகன் நீமாராம்(36), என்பவரை கைது செய்தனர்.அத்துடன் குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?






