புதுச்சேரி-தமிழகத்துக்கு மது பாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற ஒருவரை போலிசார் கைது செய்தனர்

புதுச்சேரி: முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா உத்தரவின்படி உருளையன்பேட்டை காவல் நிலைய போலிசார் புதுச்சேரி 100 அடி சாலையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி கையில் பையுடன் நின்றிருந்தவரை பிடித்து சோதனையிட்டதில், 5.8,400 மதிப்புள்ள 140 மதுப் பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.விசாரணையில் அவர் ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (30) என்பதும், தமிழகத்துக்கு மதுப் பாட்டில்களை கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்க இருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர் பறிமுதல் செய்த மது பாட்டில்களை கலால் துறையில் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?






