தருமபுரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 15 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தர்மபுரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி காவலர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 15 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
What's Your Reaction?






