வலையில் விழவைக்கும் இளம் பெண்கள்; பின்னாடியே அரிவாளோடு வரும் ஆண் நண்பர்கள்

May 13, 2024 - 10:50
May 13, 2024 - 11:33
 0  13
வலையில் விழவைக்கும் இளம் பெண்கள்; பின்னாடியே அரிவாளோடு வரும் ஆண் நண்பர்கள்

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.அதில் இரண்டு பெண்கள் தன்னை உல்லாசத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு திடீரென வந்த அப்பெண்களின் ஆண் நண்பர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் தன்னிடம் இருந்த செல்போன், பணம் உள்ளிட்டவற்கை கத்தியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டதாக புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி தனஜெயம், ஆய்வாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் தீவிர போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சண்முக நதி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கார்களில் வந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (வயது 40), நத்தத்தைச் சேர்ந்த பாலமுருகன் (37), லோகநாதன், பவித்ரா (24), காமாட்சி (25) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் கடந்த சில நாட்கள் முன்பு தனியார் விடுதியில் ரமேஷ் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து எக்ஸ்.யூ.வி கார், கொடைக்கானலில் இருந்து நிசான் காரை திருடி வந்ததும் தெரியவந்தது.மேலும் அரிவால், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் கொடைக்கானலிலும் சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow