ஒசூரில் திருவிழா சென்ற நேரம் பார்த்து 75 சவரன் கொள்ளை;மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

May 13, 2024 - 11:32
 0  8
ஒசூரில் திருவிழா சென்ற நேரம் பார்த்து 75  சவரன் கொள்ளை;மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஓசூர் மத்திய பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் நாகராஜன். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறது. இவரது மனைவி வனிதா அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியர் ஓசூர் மத்திய பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் சொந்த ஊரில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில இருவரும் சென்றிருந்த நிலையில், திருவிழா முடிந்து நேற்று மாலை ஓசூர் திரும்பினார்கள். வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 75 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனடியாக இது குறித்து சதீஷ் நாகராஜன், ஓசூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கதவிலும், பீரோவிலும் இருந்த கைரேகைகளையும், பிற தடயங்களை சேகரித்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து இருவரும் தங்களின் சம்பள பணத்தில், வாடகை வீட்டில் குடியிருந்தவாறு கடந்த 10 வருடங்களாக சிறுக சிறுக சேர்த்த பணத்தில் வாங்கிய அத்தனை நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தம்பதியர் தெரிவித்தனர். அந்த குடியிருப்பு பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களைக் கைப்பற்றி ஆராய்ந்த போலீசாருக்கு அவை இரண்டுமே பல மாதங்களாக செயல்படாமல் இருந்தது அதிர்ச்சியை தந்தது. சிசிடிவி கேமிராக்கள் செயல்படாததால், இந்த வழக்கில் கொள்ளையர்களை நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow