பென்னாகரம் அருகே பணம் நகைக்காக பெண் கொலை; போலீஸ் வலை வீச்சு

பென்னாகரம் அருகே உள்ள கூக்குட்டமருத அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட காட்டுவாளை தோட்டம் பகுதியைச் சோ்ந்த பிரபுராஜ் மனைவி பத்மினி (55). இவா் கோயில் பூசாரியாக உள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பத்மினி சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பிரபுராஜ் வீட்டிற்குள் சென்று பாா்த்தாா். அப்போது, பத்மினி இறந்து கிடந்தாா்.மேலும், அவரது கழுத்தில் இருந்த தாலி அறுக்கப்பட்டு காயங்கள் இருந்ததை கண்ட உறவினா்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) ராஜசுந்தா், காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பத்மினியை தலையணை வைத்து அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாலி, பீரோவில் இருந்த நகை, ரூ. 55,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளாா். கூறாய்வுக்காக பத்மினியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
What's Your Reaction?






