கூத்து பார்க்க சென்ற அதிமுக பிரமுகரை குத்தி போட்ட கொடூரம்
கடலுார் திருப்பாதிரிப்புலியார் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாபன். நேற்று இரவு பாகூர் அருகே உள்ள திருப்பனாம்பாக்கம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கூத்து மற்றும் கரகாட்ட நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்றுள்ளார். பின்னர், இன்று தனது நண்பரான கூத்து கலைஞர் ரங்கா என்பவருடன் பைக்கில் கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாகூர் அருகே உள்ள இருளஞ்சந்தை வாட்டர் டேங்க் அருகே சென்ற போது, பின்னால் காரில் வந்த கும்பல், பைக்கின் மீது வேகமாக மோதி கிழே தள்ளியது. உடனே, காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், பத்மநாபனை வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம், பாகூர் காவல் ஆய்வாளர் சஜித், உதவி ஆய்வாளர் நந்தக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டன. மேலும், தடயவியல் நிபுணர்கள் குழுவினர், சம்பம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து பாகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?