30 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்;காம வெறியர்கள் 3 பேர் கைது

May 13, 2024 - 15:33
 0  12
30 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்;காம வெறியர்கள் 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மாதர்பாக்கம் கிராமத்தில் உள்ள மைதானத்தில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு.மே 9 ம் தேதி உடலின் பல இடங்களில் காயங்களுடன் ஆடைகள் நிலையில் இளம்பெண் சடலம் இருப்பதாக அப்பகுதிவாசிகள் தகவல் அளித்துள்ளனர். இந்நிகழ்வு இடத்திற்குச் சென்ற பாதிரிவேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகின.மதுபானக் கடையில் மது பாட்டிலை வாங்கிக் கொண்டு நடந்து செல்வதும் கூறப்படுகிறது அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் 3 பேர் சென்றதும் தெளிவாக பதிவாகியுள்ளது.அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிரிவேடு பகுதியில் 25 வயது சூர்யா, தேர்வாய் கிராமத்தில் 21 வயது சுரேந்தர் கண்ணம்பாக்கம் பகுதியில் ஜெபக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட பெண்ணை 3 பேர் தொடர்ந்து சென்று ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாகவும் அதற்கு அந்தப் பெண் உடன்படாததால் ஆத்திரமடைந்த 3 பேரும் அப்பெண்ணை தாக்கி தரதரவென வயல்வெளியில் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.அப்போது உடலில் ஏற்பட்ட காயத்தால் அந்தப் பெண் கதிறயதையும் பொருட்படுத்தாமல் 3 பேரும் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்றதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 3 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow