தொடரும் காட்டு யானை தாக்குதல்; பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கிராமத்தில் இன்று காலை 8.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் நின்று கொண்டிருந்த காளியம்மா (வயது 70) என்ற மூதாட்டியை காட்டு யானை தாக்கியது. இதில் காளியம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெய்தாலாபுரம் கிராமத்தில் பட்டப்பகலில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், யானை ஊருக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை இறந்தவர்களை வாங்க மாட்டோம் என்றும் அரசு மருத்துவமனையில் திரண்ட விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், முடியனூரைச் சேர்ந்த ராமு, திகினரை கிராமத்தைச் சேர்ந்த மாக்கையா ஆகியோர் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
What's Your Reaction?