நள்ளிரவில் இருசக்கர வாகனம் திருட்டு;மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் இவர் தாம்பரத்தில் பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு சனி கிழமை இரவு வீட்டு அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றார் பின்பு காலை வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது..இது குறித்து மகேஷ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பின்பு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவு மூணு மணி அளவில் இருசக்கர வாகனத்தை ஹெல்மெட் அணைத்தபடி வந்த இரண்டு வாலிபர்கள் வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.தற்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் லாபமாக இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?