மறைமலைநகர் அருகே திருட்டு வழக்கில் வாலிபர் கைது
செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (61).இவர், கடந்த 2ம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து பழனி மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். கடந்த மாதம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 15 காவல் நிலையங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?