தங்க நகைகள் திருட்டு; ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் கைது

சென்னை எம்ஜிஆர் நகர் குண்டலகேசி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் மாநகர பேருந்தில் கண்டக்டர் ஆக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி ராஜலட்சுமி வயது 40 உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆசையில் 18 சவரன் தங்கச் சங்கிலியை ஆசையாக அணிந்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.திருமணம் முடிந்த கையோடு தான் அணிந்திருந்த 18 சவரன் தங்க நகைகளை கழற்றி கைப்பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவதற்காக கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட மாநகர பஸ் மூலம் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே பஸ்ஸில் இருந்து இறங்கியபோது ராஜலட்சுமி கைப்பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் செய்தார் புகாரை பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்மு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மாநகர பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ராஜலட்சுமியிடம் தங்க நகைகளை கொள்ளை அடித்தது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விமலா வயது 30 (குண்டு விமலா) என தெரியவந்தது.இவர் வேலூரில் தங்கி இருப்பதும் இதுபோன்ற ஓடும் பஸ்ஸில் கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர் கொள்ளையடித்த 18 சவரன் தங்க நகைகளை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?






