சென்னை அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி கொள்ளை

Apr 15, 2024 - 16:55
 0  9
சென்னை அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி கொள்ளை

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பட்ட பகலில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ள முத்தாபுதுப்பேட்டை. இப்பகுதியில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி எனும் பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல இன்று கடையில் பிரகாஷ் இருந்த நிலையில், காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து பிரகாஷை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரின் கை, கால்களை கட்டிவிட்டு சுமார் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனை கொண்டு மிரட்டல் விடுத்து நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow