சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி; உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
சென்னை பெரம்பூர் நட்டால் கார்டன் பகுதியில் வசிப்பவர் நேபாளத்தை சேர்ந்த தாமோதரன் (42). இவர் பெரம்பூரில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்கிறார். இந்த ஓட்டலை கடந்த 2மாதமாக சிவகுமார் என்பவர் நடத்தியுள்ளார். இந்த நிலையில், தாமோதரனுக்கு கடந்த ஒரு மாத சம்பளம் வழங்கவில்லை என்று தெரிகிறது. நேற்றுமுன்தினம் இரவு வேலை முடித்து செல்லும்போது தாமோதரன் தனது சம்பளத்தை கேட்டுள்ளார்.அப்போது சிவகுமார், அவரது உறவினர் ஆகியோர் சேர்ந்து தாமோதரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். முகத்தில் படுகாயம் அடைந்த தாமோதரனை உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தாமோதரன் கொடுத்த புகாரின்படி, செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில்போலீசார் விசாரணை நடத்தி ஓட்டல் உரிமையாளர் சிவகுமார், அவரது உறவினர் தங்கதமிழன் ஆகியோரை கைது செய்தனர். இதன்பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?