முன்னாள் கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம்;பின்னணி என்ன...?
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கோயிலின் உள் அமர்ந்திருந்த தரங்கம்பாடி முன்னாள் கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாசிலாமணிநாதர் கோயிலில் அமர்ந்திருந்த முன்னாள் கவுன்சிலர் அருண்குமார் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.தீ வைத்ததில் அருண்குமார் 65% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.மேலும், அருண்குமார் மீது தீ வைத்தவர்கள் முன்பகை காரணமாக இதனை செய்தார்களா? அரசியல் ரிதியான கொலை முயற்சியா? இல்லை குடும்ப பிரச்னை? தொழில்போட்டியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?