குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 180 சவரன் நகைகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த காவல் துறை
மக்கள் குறை கேட்பு முகாமில் மீட்கப்பட்ட நகைகள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு
ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்க பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது டேங்க் பேக்டரி முத்தா புதுப்பேட்டை மற்றும் மாங்காடு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 180 சவரன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த 35 மொபைல் போன்கள் அதிரடியாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது அவற்றை ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி.சங்கர் ஒப்படைத்தார் இந்நிகழ்வில் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் துணை ஆணையர்கள் போக்குவரத்து ஜெயலட்சுமி ஆவடி ஐமன் ஜமால் குற்றப்பிரிவு பெருமாள் மாதவரம் பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர் குழந்தைகளோடு பங்கேற்ற பெண்களுக்கு குஷி படுத்த டீ காபி குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது
What's Your Reaction?