ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.75 ஆயிரத்து 300 பணம் பறிமுதல்

Apr 16, 2024 - 15:12
 0  7
ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.75 ஆயிரத்து 300 பணம் பறிமுதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி அவர்களின் உத்தரவுன்படி - குடியாத்தம் சட்டமன்ற (தனி) தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சுபாநந்தராஜ் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் சுமதி காவலர் குமார் ஆகியோர் இணைந்து பேரணாம்பட்டு அடுத்த பக்காலபள்ளியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது புதுச்சேரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் வந்தவர்களிடம் ரூபாய் 75 ஆயிரத்து 300 ரூபாய் இருந்தது தெரியவந்தது.ஆனால் அதற்குண்டான ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் சித்ராதேவி அவர்களிடம் ஒப்படைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow