காணாமல்போன ஓட்டுநர் கல்குவாரியில் சடலமாக மீட்பு;போலீஸ் விசாரணை
கே.வி.குப்பம் வட்டம், வடுகந்தாங்கல் ஊராட்சியைச் சோ்ந்த மறைந்த முருகேசன் மகன் சுபாஷ் (25).வேன் ஓட்டுநரான இவரை செவ்வாய்க்கிழமை காலை முதல் காணவில்லை என கூறப்படுகிறது.இது குறித்து அவரது தாய் கஸ்தூரி கொடுத்த புகாரின்பேரில், கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.இந்த நிலையில், ஆலங்கநேரியை அடுத்த செம்பட்டரையில் உள்ள கல்குவாரி நீரில் ஆணின் சடலம் மிதப்பதாக புதன்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அது சுபாஷின் சடலம் என்பது தெரியவந்தது. கல்குவாரியில் சுபாஷ் தவறி விழுந்தாரா?, தற்கொலையா?அல்லது அவரை யாராவது கொலை செய்து குவாரி தண்ணீரில் வீசிவிட்டுச் சென்றனரா என்பது குறித்து பல கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
What's Your Reaction?