ஏரிக்கரையில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்.. கள்ளத்தொடர்பில் கொல்லப்பட்டாரா.?

Jul 27, 2024 - 18:04
Jul 27, 2024 - 18:10
 0  22
ஏரிக்கரையில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்.. கள்ளத்தொடர்பில் கொல்லப்பட்டாரா.?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி பகுதி அமைந்துள்ளது. இங்கு சீமை கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஏரிக்கரையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில் நேற்று இங்கு இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக ஆடு மேய்க்க சென்ற ஒருவர் பார்த்த நிலையில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உட்பட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.அந்த விசாரணையில் உயிரிழந்த இளம் பெண் யார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது உயிரிழந்த பெண்ணின் பெயர் மணிமேகலை ‌(29). இவர் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ரமேஷ் என்பவரின் இரண்டாவது மனைவி ஆவார். இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரித்த மணிமேகலை இரண்டாவது ஆக ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் நிஷா (8) மற்றும் பவ்யா (5) ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அதன் பிறகு ரமேஷுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் வசித்து வந்த நிலையில் அடிக்கடி மணிமேகலை மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு சென்றுள்ளார்.இதனால் மணிமேகலைக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ரமேஷ்க்கு தெரிய வந்த நிலையில் அவர் இருவரையும் கண்டித்தார். அதோடு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்த நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதற்கிடையில் கடந்த 15ஆம் தேதி குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற மணிமேகலை திடீரென மாயமாகிவிட்டார். அப்போது மாயமான மணிமேகலை தற்போது எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவரவில்லை. மேலும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow