ஆலங்குளம் அருகே கள்ளத்தொடர்பு காரணமாக இருவர் வெட்டிக்கொலை

May 23, 2024 - 06:22
 0  8
ஆலங்குளம் அருகே கள்ளத்தொடர்பு காரணமாக இருவர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் (58).இவரது மகன் கனகராஜ் (32). நேற்று முன்தினம் இரவு இருவரும் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் இருந்த கனகராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்று நடராஜனையும் வெட்டி விட்டு தப்பியது. நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராஜன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.இரட்டை கொலை தொடர்பாக வீரவநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேஷ் (28), ராகுல்(23), வேணு (21), வனராஜா (19) ஆகியோரை கைது செய்தனர். கனகராஜின் மனைவி கவிக்குயிலும், கருத்தானூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் திருமணத்திற்கு முன்பு காதலித்துள்ளனர். திருமணத்திற்கு பின்பும் இவர்கள் பழக்கம் தொடர்ந்தது. இது தெரிந்து வெங்கடேசை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம்தேதி மரத்தில் கட்டி வைத்து தாக்கியதுடன், ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதற்கு பழிக்கு பழியாக வெங்கடேஷ் உள்பட 5பேர் கொண்ட கும்பல் இரட்டை கொலையில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow