அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.53 லட்சம் சுருட்டியவர் கைது

நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த ராஜன், 50, பல்வேறு அரசியல் கட்சிகளில் சில பதவிகளில் இருந்தார்.இவர் அரசு வேலை வாங்கி தருவதாக ஊட்டியில் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றினார்.தொடர்ந்து, குன்னுாரை சேர்ந்த நவீன், மாவட்ட குற்ற தடுப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அவர், 9 பேரிடம் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக, 38 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.தவிர, வீட்டை புனரமைத்து தருவதாக கூறி, ஊட்டி காந்தள் பகுதியில், 33 பேரிடம், 15.25 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். மொத்தம், 53.28 லட்சம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு ராஜனை போலீசார் கைது செய்து, ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






