காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வார சந்தை மேம்பாட்டுப் பணிகளான திறந்தவெளிக் கடைகள் மற்றும் பேவர் பிளாக் சாலை ஆகியவற்றை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து காரிமங்கலம் பேரூராட்சி சேர்மன் பி.சி.ஆர். மனோகரன் தலைமையில் துணை சேர்மன் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






