மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள் ; சென்னையில் பரபரப்பு
சென்னை மதுரவாயலில் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் லலிதாம்பிகை கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொலைவெறியில் ஒரு மாணவனை தாக்கினர். இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சட்டை கிழிந்து கீழே விழுந்த மாணவனை, அங்கிருந்த சக மாணவர்கள் தூக்கிச் சென்றனர். மாணவன் காயங்களுடன் வெளியேறினார். மாணவர் தாக்கப்படும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






