புதிய தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் நாகமரை ஊராட்சி வன்னியநகர் முதல் ஒட்டனூர் வரை செல்லும் இணைப்பு சாலை நாற்பது ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. இதனால் மழை காலங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். விரைவில் புதிய தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?






