போதையில்லா கோவையை உருவாக்குவோம்;
கோவை மாவட்ட காவல்துறையோடு இணைந்து பிதர்ஹூட் இஹ்வான் டிரஸ்ட் சகோதர அறக்கட்டளை சார்பாக போதையில்லா கோவையை உருவாக்கவும் மற்றும் தலை கவசம் உயிர் கவசம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தையும் கோவை டவுன் ஹாலில் டிசம்பர் 11 அன்று கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் .மதிப்புக்குரிய. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வில் தலைகவசம் அணிந்தவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 1000 ற்கு மேற்பட்டவர்கள் கையெழுத்துட்டு பதிவு செய்தனர். இந்த நிகழ்வை பிதர்ஹூட் தலைவர். இஹ்வான் ஷெரீப் ஏற்பாடு செய்துள்ளார். பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல் ஹாஜ் எம்.இணையத்துல்லா, பொதுச் செயலாளர்
சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு
கோயம்புத்தூர், வி.பி.முபாஷிரா வரி மற்றும் நிதிக்குழு தலைவர் கோவை மாநகராட்சி, வார்டு 82, V I பத்ருதீன் பெரிய கடை வீதி பகுதி 2 பகுதி செயலாளர், எல்.அமானுல்லாஹ்., தலைவர்.
கோவை அதர் ஜமாத் செயற்குழு, கோவை ஃபைசல், இணை செயலாளர், கோயம்புத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவி சங்கம்., சமூக ஆர்வலர். சிஸ்கோ காஜா, என் என் ஐ பிளசர் தலைவர் முனைவர். அரிஷ்ரீ, ஆர்க் ஸ்பேஸ் டிசைன் கார்த்திக் செல்வராஜ்.,
ஆறுமுகம் மற்றும் சுவாமி அவர்கள், சமூக ஆர்வலர். சாதிக், சமூக ஆர்வலர் கோட்டை செல்லப்பா, அசார் மற்றும் இஹ்வான் டிரஸ்ட் சகோதர அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?