தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியை எனக்கூறி வெளியே தள்ளிய பள்ளி தாளாளர்;போலீசார் வழக்குப் பதிவு

சென்னை எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனியில் டான் பாஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இதில் பெஞ்சமின் சூசை என்பவர் தாளாளராக உள்ளார். அதே பள்ளியில் தமிழ் ஆசிரியையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் பணியாற்றி வந்தார்.இந்தநிலையில் தாளாளர் பெஞ்சமின் சூசை, ஆசிரியை தமிழ்ச்செல்வியை நீக்கிவிட்டு மாற்று ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவரை தமிழ் ஆசிரியராக நியமித்துள்ளார்.இதுதொடர்பாக தாளாளர் பெஞ்சமின் சூசையிடம் ஆசிரியை தமிழ்ச்செல்வி கேள்வி எழுப்பியபோது, அவரை ஜாதி ரீதியாக அவமதித்துள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான ஆணையத்தில் தமிழ்ச்செல்வி புகார் அளித்தார்.இதற்கிடையே கடந்த மே 10ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது தமிழ்செல்வி பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது, அவரை கண்ட தாளாளர் அனைவர் முனையிலையிலும், ‘நீ ஏன் தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான ஆணையத்தில் புகார் அளித்தாய்’ என்று கூறி, மீண்டும் ஜாதி பெயரை கூறி திட்டி அவமானப்படுத்தியதுடன் பள்ளியை விட்டி நீக்கியுள்ளார்.இதனால் வேதனையடைந்த ஆசிரியை, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கான ஆணையத்திலும், சென்னை எம்.கே.பி. நகரில் உள்ள காவல் உதவி ஆணையர் வரதராஜனிடமும், கொடுங்கையூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன்பேரில் தாளாளர் பெஞ்சமின் சூசை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






