ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 6 லட்ச ரூபாய் பறிமுதல்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள உஞ்சம்பட்டி சந்திப்பில் வெம்பக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரலிங்கம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சிவந்திபட்டி அருகே தனிப்புலிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த அலெக்ஸ்குமாரை நிறுத்தி அலுவலா்கள் சோதனை செய்தனா்.இதில் அவா் உரிய ஆவணமின்றி ரூ. 6 லட்சத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, சாத்தூா் வட்டாட்சியா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா்.
What's Your Reaction?