தாசில்தார் வீட்டில் கொள்ளை; பணம்,நகைகளை மீட்ட காவலருக்கு டிஜிபி பாராட்டு
காஞ்சிபுரம்: காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி எஸ் கேதெரு பாண்டுரங்கன் பெருமாள் கோவில் அருகே ஏட்டு நித்தியானந்தம் | என்பவர் TN 11 BF6226 என்ற எண்ணுள்ள ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் ஏகாம்பரம் 48. என்பவர் ஆட்டோவில் ரொக்க பணம்,தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.திறமையாக துப்புத் துலக்கி காவல்துறையின் பாராட்டுதலை பெற்ற ஏட்டு நித்தியானந்தத்தை காவல்துறையின் தலைமை இயக்குனர் படைத்தலைவர் சங்கர் ஜிவால் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு சான்றிதழ் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
What's Your Reaction?