தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்புப் பேரணி

Apr 12, 2024 - 08:16
 0  44
தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்புப் பேரணி

மக்களவைத் தேர்தல் ஏப். 19-இல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்புக்கு காவல் துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்புப் பேரணி ராசிபுரத்தில் நடைபெற்றது.பேரணியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் த. முத்துராமலசிங்கம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை, சேலம் சாலை, கடைவீதி போன்ற முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது.இந்த அணி வகுப்பில் காவல் துறையினர், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்தியவாறு பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow