கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு; 2 காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம்

May 7, 2024 - 18:17
 0  38
கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு; 2 காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம்

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தலைமைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி வானந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்துள்ளார்.சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல பெண் கஞ்சா வியாபாரி தலைமையிலான கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது பெண் கஞ்சா வியாபாரிகளுடன் சில போலீசார் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சந்தேகமடைந்த போலீசாரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து, கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த போலீசாரை கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில், புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் கந்தவேல், அறந்தாங்கி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் முத்துக்குமார் ஆகிய இருவரும் பிரபல பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு பிறப்பித்தார். மேலும், இதே புகாரின் காரணமாக முத்துக்குமார் கடந்த 2021-ம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இருவரும் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருப்பதும், கஞ்சா வியாபாரிகளிடம் போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே தெரிவித்து கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow