ஒகேனக்கல் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Aug 15, 2024 - 18:01
 0  15

சுதந்திர தினம் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை நினைவூட்டுகிறது, அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனம் இல்லாத புதிய வாழ்க்கையின் தொடக்கம். இதே காரணத்திற்காகத்தான் சுதந்திர தினம் நாடு முழுவதும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15 , 1947 பிரிட்டிஷ் காலனித்துவத்தின் முடிவு மற்றும் ஜனநாயகக் குடியரசின் விடியலைக் குறித்தது. சுதந்திரப் பயணத்தின் இன்றியமையாத அங்கமாக விளங்கிய இந்திய சுதந்திர மசோதா பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்து, இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்றவர் ஜவஹர்லால் நேரு.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆண்டுகால அகிம்சை முயற்சிகளால் இந்தியா சுதந்திரம் பெற்றது. குடிமக்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தை 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் இன்று அரசு பள்ளி மாணவ மாணவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர் திரு து.உமாசங்கர் மாவட்ட சுற்றுலா அலுவலர் கொடியேற்றி துவக்கி வைத்தார். சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் வகையில் சுதந்திர தின விழாவான உலக தரம் வாய்ந்த சுற்றுலா தலமானமான தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் ஊட்டமலை அரசு பள்ளி மாணவ மாணவிகளின் பேரணி அணிவகுப்புடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.நாட்டின் 78 ஆவது சுதந்திர தின விழாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாகஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சி.பாலாஜி அவர்கள் தலைமையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.வி.முத்தையன் அவர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமை ஆசிரியர் உதவியுடன் தனது கரங்களால் மண்வளம் காக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டார்.

அத்துடன் சுதந்திர தின விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow