சென்னையில் பிரபல பிரியாணி கடைக்கு சீல்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, டி.எச்.சாலையில் செயல்பட்டு வரும் அதே பிரியாணி கடையின் கிளையில் கடந்த 16-ம் தேதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் நேற்று பொன்னேரியில் உள்ள அந்த பிரபல பிரியாணி கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது,அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ கெட்டுப் போன பிரியாணி, 150 கிலோ சிக்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்தக் கடைக்கும் சீல் வைத்தனர்.
What's Your Reaction?