திருமணமான 6 மாதத்தில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை;போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 3 மாத கர்ப்பிணி பெண் கணவருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கருமஞ்சிறையை சேர்ந்த முத்துக்குமாருக்கும் சந்திராவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.தற்போது சந்திரா திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் படித்து வருகிறார்.இவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 27ம் தேதி தகராறு ஏற்பட்டு சந்திரா ஊத்துக்குளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றதை இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கணவர் முத்துக்குமார் தனது மனைவி சந்திராவை கருமஞ்சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்தபோது தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குன்னத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?