பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள பிதாபுரத்தைச் சேர்ந்தவர் துர்கதா ஜான். ஆட்டோ ஓட்டுநரான இவர் அந்த பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார். இவரது மனைவி துர்கதா விஜயலட்சுமி தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். தற்போது அக்கட்சியின் நகர தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வலுக்கட்டாயமாக 12ம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று கற்பழித்துள்ளார்.கடந்த திங்கட்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த மாணவியை ஆட்டோ டிரைவர் துர்கதா ஜான் தனது ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜான், இது குறித்து வெளியே சொன்னால், மாணவியையும், அவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.இந்நிலையில், வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காக்கிநாடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசியல் பிரமுகரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






