லாரி மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் திடீரென சாலை மறியல்

Oct 7, 2024 - 18:52
Oct 7, 2024 - 18:53
 0  6
லாரி மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் திடீரென சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் தினகரன் (20). இவரும் இவரது நண்பர்கள் இருவரும் நத்தம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர் அப்போது கோபால்பட்டியை அடுத்த ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி இவர்களது பைக் மீது பயங்கர வேகத்தில் மோதியது.இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில், பைக்கை ஓட்டிச் சென்ற பாலாஜியும் அவருடன் சென்ற நண்பரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த தினகரன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தினகரன் உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 3 பேரும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஜூஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் லாரிகள் எப்போதும் அதிவேகமாக செல்வதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow