விழுப்புரத்தில் பேருந்து விபத்து உயிர் தப்பிய பயணிகள்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






