லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் உடல் கருகி பலி

Jul 29, 2024 - 20:23
 0  9
லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் உடல் கருகி பலி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் மகன் ராதாகிருஷ்ணன் என்ற வெள்ளையன் (38). இவருக்கு லிந்தாரூத்மேரி என்ற மனைவியும், ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியசாமி டிரான்ஸ்போர்ட் என்ற டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.மேலும் டிப்பர் லாரியில் குறுக்கு சாலை பகுதியிலுள்ள தனியார் தார் கம்பெனியிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக தார் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லாரிக்கு நடை இல்லாத காரணத்தினால் குறுக்குச்சாலை பகுதியில் உள்ள தனியார் தார் கம்பெனியில் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.இதில் லாரியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தாெடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow