சரக்கு பாட்டில்களை வண்டி வண்டியாக அல்லிச்சென்ற மதுப்பிரியர்கள்
வேலூர் மாவட்டம் டாஸ்மாக் குடோனில் இருந்து வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகிய இடங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி ஆம்பூர் அடுத்த மரப்பட்டு சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது.இதனால், லாரியில் கொண்டு செல்லப்பட்ட 790 மதுபாட்டில்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. திருப்பத்தூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் சிதறி கிடந்த பாட்டில்களை முதலில் எடுக்க தொடங்கினர். லாரி டிரைவரும், கிளீனரும் மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற அவர்களை தடுக்க முயன்றனர். பின்னர் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், மதுபாட்டில்களை வைத்திருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர். இதனால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.38 லட்சம் இருக்கும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?