மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 7 ஆண்டு சிறை;நீதிமன்றம் தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் ஷாலினி (24), விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்த பச் சையப்பன் (36) இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாமியார் பத்மினியும், கணவன் பச்சையப்பனும் சேர்ந்து ஷாலினியை கொடுமைப்படுத்தி வந்துளனர். இதனால் மனமுடைந்த அவர் 5.12.2020 அன்று தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஷாலினியின் தந்தை சேகர் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஷாலினியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் பச்சையப்பன், மாமியார் பத்மினி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணைக்கு பின், வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கிய ஜோதி, குற்றம் சாட்டப்பட்ட பச்சையப்பனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து, பத்மினியை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து பச்சையப்பன் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
What's Your Reaction?